விருச்சகம் - வார பலன்கள்

Update:2022-10-21 01:28 IST

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

கலை நுணுக்கத்துடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். அவசியமில்லாத பேச்சுகளால் அவதூறு உண்டாகலாம். பதிவேடுகளில் கவனமாக இருப்பது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாகப் பணிகளில் ஈடுபடுவர். புதிய வேலைகள் வந்துசேரும். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும். கூட்டாளிகளில் ஒருவர், தனியாக தொழில் தொடங்கலாம். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் பணிகளில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். சகக்கலைஞர் ஒருவர், உங்களுக்கு புதிய நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்க காரணமாக இருப்பாா். வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். சுபநிகழ்ச்சிகளை நடத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவினரால் சிறு மன வேறுபாடு ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் சொல்வன்மை வாய்க்கும்.

மேலும் செய்திகள்