எதையும் திட்டமிடுதல் அவசியம். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களால் பிரச்சினை வந்தாலும், உங்களுடைய திறமை உங்களை கை விடாது. தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் சுமாரான வளர்ச்சியைப் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் படிப்படியாக சரி யாகிவிடும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.