உடல்நலக்குறைவால் அவதிப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள். கடன் பிரச்சினைகள் குறைய வழிபிறக்கும். உத்தியோகத்தில், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் செய்பவர்கள், போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மன மகிழ்ச்சியைத் தரும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு மல்லிகை மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.