உங்கள் செயல்களில் வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவர். தொழிலில் உற்சாகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு சரியான நேரத்தில் கைகொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.