விசாலமான மனம் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!
சனிக்கிழமை முதல் திங்கள் காலை 6.54 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்க்கவும். உங்களின் சில வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்து முடித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடினமான ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருகையும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் காணப்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் சுமாரான லாபம் அடைவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு வியாபார அபிவிருத்திக்குத் துணை செய்யும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவற்றால் பெரிய பாதிப்புகள் வராது. கலைஞர்கள் புதிய பணிகளில் உற்சாகமாக செயல்படுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.