விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-08-04 00:49 IST

4.8.2023 முதல் 10.8.2023 வரை

சிறப்பான சிந்தனை வளம் நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!

நண்பர்கள் உதவியுடன் வெற்றிகளைக் குவிக்கும் வாரம் இது. எதிர்பார்க்கும் தன வரவுகள் திட்டமிட்டபடி வந்து சேர்ந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். தொல்லை கொடுத்து வந்த சிலர், மனம் மாறி தோள் கொடுக்க முன்வருவர். தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வீர்கள். தர்ம காரியங்களிலும், புண்ணிய செயல்களிலும் நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் விருப்பப்படி தள்ளி வைத்த வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் மனதில் உற்சாகம் கூடும். புதிய நபர்களின் வேலைகளால் பணவரவு அதிகமாகும். ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபட நேரிடும். கூட்டாளிகளுடன் கூடி போட்டிகளை முறியடிக்க ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றி மறையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவா்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்