விருச்சகம் - வார பலன்கள்

Update:2023-07-14 01:29 IST

நற்பண்புகளால் பிறர் போற்ற வாழும் விருச்சிக ராசி அன்பர்களே!

முக்கியமான காரியங்களில் தீவிரமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் சனிக்கிழமை பகல் 1.30 மணி முதல் திங்கட்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக முடிவெடுங்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். சில எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி எதிர்பாராமல் தேடிவரும். சொந்தத்தொழிலில் பணிகள் பரபரப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் தேவை கருதி பணியில் அவசரம் காட்டுவீர்கள். கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கடன் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் இல்லாவிட்டால் உறவுகளுக்குள் மனக்கசப்பு உருவாகும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்