தர்மத்தை மதித்து நடக்கும்மீன ராசி அன்பர்களே!
புதன் மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. எதிர்பார்க்கும் தனவரவுகள் திட்டமிட்டபடி வந்து சேரும். பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். விரும்பிய இடத்துக்கு சம்பள உயர்வுடன் இடமாற்றம் ஏற்படும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தொழில் நுட்பம் அறிந்த உதவியாளர் ஒருவரை பணியமர்த்தத் திட்டமிடுவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பெறுவர். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பணவரவு அதிகமாகலாம். சில்லறைக் கடன்களை அடைப்பீர்கள். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் பொருள் வளம் சேரும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.