மீனம் - வார ராசிபலன்

Update:2024-05-09 15:32 IST

05.05.2024 முதல் 11.5.2024 வரை

கடந்த பல மாதங்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் ஆரோக்கிய சீர்கேடுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக அமைந்து ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை அச்சுறுத்தி வந்த உடல் ஆரோக்கியம் தற்போது மெல்ல சீராக கிரகங்கள் சாது ஏதுவாக இருக்கிறது. எதிலும் துணிச்சலான முடிவு எடுக்கும் வாரம் இது. தம்பதிகளிடையே சிறு சிறு பிரச்சனைகள் எழக்கூடும். கவனமுடன் இருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் கவனமான பேச்சு உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தாது. சிலர் கண் சம்பந்தமான மருத்துவம் அல்லது கண் புரை நோய்க்கான அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆயத்தமாவீர்கள். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். இது உங்கள் உடல் நலனுக்கு மிக உகந்ததாக அமையும்.

மேலும் செய்திகள்