மீனம் - வார பலன்கள்

Update:2023-10-20 01:09 IST

20-10-2023 முதல் 26-10-2023 வரை

சிந்தித்து முடிவெடுக்கும் மீன ராசி அன்பர்களே!

அவசியமான காரியங்களை அதிக முயற்சியோடு செய்து வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டபடி பண வரவு வந்துசேரும். தாய்வழி உறவுகளில் நடைபெறும் மங்கல காரியத்துக்கு, பொருளுதவி செய்வீர்கள். எதிர்பார்க்கும் அரசாங்க காரியங்களில் திருப்பம் ஏற்படலாம். வடக்குத் திசையில் இருந்து முக்கிய தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்தத் தொழில் ஏற்றம் தரும். வாடிக்கையாளர்களின் வருகை உண்டு. கூட்டுத்தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் கலந்தாலோசனை செய்வது தொழிலை மேம்படுத்த உதவும். குடும்பத்தில் சிறுசிறு மனவேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வோடு பணியாற்றுவர். வருமானம் அதிகரிக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்