காரியங்களை திட்டமிட்டபடி செய்யும் மீன ராசி அன்பர்களே!
எதிர்பார்க்கும் பண வரவு வந்து, கொடுக்கல் - வாங்கலில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்வீர்கள். நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையோடு செயல்பட்டு, உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். முக்கிய பணிக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யப்படலாம். பதிவேடுகளை கவனமாக பாதுகாக்காவிட்டால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
சொந்தத் தொழில் நன்கு நடைபெற்றாலும், போதிய ஆதாயம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் தேவை அறிந்து உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், பெரிய பாதிப்பு வராது. இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். பணிகளில் கவனம் தேவை.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபட்டு வாருங்கள்.