மீனம் - வார பலன்கள்

Update:2023-09-08 01:25 IST

கருத்துமிக்க செயலை அழகுடன் செய்யும் மீன ராசி அன்பர்களே!

முன்னேற்றமளிக்கும் காரியங்களைச் செய்வதில் முயற்சியோடு ஈடுபடுவீர்கள். அவசியமான செயல்களில் முக்கியமானவர் களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்ப்படுத்துவீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்தபடி சரளமாக இருக்கும். புத்திர வழியில் முக்கியமான நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். அலுவலகத்தின் மூலமாகக் கேட்டிருந்த கடன்கள் கைக்கு வந்து, பாதியில் நின்ற பணிகளைத் தொடருவீர்கள். சொந்தத்தொழிலில் இருந்த இறுக்கமான நிலை மாறும். வாடிக்கையாளரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் குதூகலம் இருக்கும். குடும்பத்தில் இருந்த சிறு கடன்களைத் தீர்ப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்வடைவார்கள். வளர்ச்சியும், வளமும் பெருகும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை சுதர்சனருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்