மீனம் - வார பலன்கள்

Update:2023-09-15 01:28 IST

தெளிந்த சிந்தனை உள்ள மீன ராசி அன்பர்களே!

திங்கள் முதல் புதன்கிழமை காலை 7.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், மனதில் சோர்வும், தளர்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சகப் பணியாளர்கள், உங்கள் முன்னேற்றத்தில் அனுசரணையாக இருப்பர்.

சொந்தத் தொழில் பரபரப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் திருப்தியால் மனம் மகிழ்வீர்கள். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். கூட்டுத்தொழில் முயற்சியில் கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் வெளியூர் செல்லத் திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், பணிகளில் மன நிறைவுடன் பணியாற்றுவர். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்