மீனம் - வார பலன்கள்

Update:2023-09-22 01:36 IST

சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்ட மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களை சிறப்பாக முடிக்க, கடும் முயற்சி செய்வீர்கள். பிரச்சினைகளை நிதானமாக அணுகுவது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணிகளில் சிறுசிறு தவறுகள் ஏற்படும். வரவேண்டிய கடன் தொகை, சிறிது தள்ளிப் போகலாம். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது கவனம் தேவை.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளரின் பணியை விரைவாக செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், தொழில் போட்டிகளைச் சமாளிக்க பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் பழைய கடன் தொல்லை தரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் சிலர் கடினமான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.

மேலும் செய்திகள்