29.9.2023 முதல் 5.10.2023 வரை
கலை நுணுக்கம் நிறைந்த மீன ராசி அன்பர்களே!
செய்யும் காரியங்களை முயற்சியுடன் செய்தாலும், சிலவற்றில் மட்டுமே சிறப்பான பயன்கள் கிடைக்கும். செலவுகளை சரிகட்ட நண்பர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியதிருக்கும். இல்லாவிட்டால் தொல்லைகளை எதிர்கொள்ள நேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் தள்ளிப்போகும். சொந்தத் தொழிலில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற வருமானம் கிடைப்பது சந்தேகம்தான். எதிர்கால தொழில் முன்னேற்றம் பற்றி நண்பர்களிடம் ஆலோசிப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான வியாபாரம் நடைபெறும். போட்டிகளை சமாளிக்க கூட்டாளிகளுடன் ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் தம்பதிகள் ஒற்றுமை அதிகமாகும். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.