சொந்தக் காலில் நிற்க விரும்பும் மீன ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை மாலை 6.20 மணி முதல் ஞாயிறு வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத தொழில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிப்பார்கள். பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆனால் அதற்கேற்ற வருமானம் இருக்காது. கூட்டுத் தொழில் வியாபாரம் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கலைஞர்கள் சிலர் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் அவசியம்.
பரிகாரம்:- இந்தவாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள்.