அஞ்சாத மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
எடுத்துக்கொண்ட வேலைகளில் தீவிர முயற்சியுடன் செயல்பட்டு முன்னேற்றமான பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரியின் விருப்பப்படி புதிய வேலையொன்றை உடனடியாக செய்து கொடுக்க நேரிடும். சகப் பணியாளர்களுடன் வீண் வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் மூலம் வேலையும், வருமானமும் கிடைக்கலாம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் வந்துசேரும். பணியாளர்களின் கோரிக்கைகளை கூட்டாளிகளுடன் ஆலோசித்து பூர்த்தி செய்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் போதுமான லாபம் கிடைக்கும். அதிக லாபம் பெற அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை அவசியம்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற சகக்கலைஞர்களின் ஒத்துழைப்பை நாடுவர். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறுசிறு பிரச்சினைகளும் தோன்றி மறையும்.
வழிபாடு:- ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியனுக்கு, நெய் தீபமிட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.