30.12.2022 முதல் 5.1.2023 வரை
நுட்பமான அறிவுத்திறன் கொண்டமீன ராசி அன்பர்களே!
செய்யும் முயற்சிகள் சிலவற்றில் மட்டும் வெற்றி அடைவீர்கள். தளர்வடைந்த காரியங்களை தகுதியானவர்களின் துணையோடு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்புகளில் உள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சொந்தத் தொழிலில் மூலப்பொருள் பற்றாக்குறையால் செய்யும் பணிகள் தடைப்படலாம். புதிய தொழில் தொடங்குவது பற்றி கூட்டாளிகளிடம் கலந்து ஆலோசிப்பீர்கள்.
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் நன்றாகவே நடந்து வரும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். கலைஞர்கள் தீவிர முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். எதிர்பார்க்கும் வருமானம் இல்லாவிட்டாலும், தொழிலில் திருப்தி காணப்படும். பங்குச்சந்தை வியாபாரத்தில் சில காலம் பொறுமையை கடைப்பிடியுங்கள்.
பரிகாரம்:- புத பகவானுக்கு புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாகும்.