கலைநயத்தோடு காரியங்களைச் செய்யும் மீன ராசி அன்பர்களே!
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.14 மணி முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். கடன் தொகை கைக்கு வந்துசேரும். சொந்தத்தொழிலில் போதிய லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று, எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி, அதிக லாபம் கிடைக்கப்பெறும். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களிடம் இருந்து புதிய ஒப்பந்தங்கள் பெற்று, பொருளாதார ரீதியாக உயர்நிலையை அடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்க்கும் முக்கிய சுபச்செய்தி வந்துசேரும்.
பரிகாரம்:- புதன்கிழமை நவக்கிரக சன்னிதியில் புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வணங்கினால் நன்மை நடைபெறும்.