மீனம் - வார பலன்கள்

Update: 2022-12-08 20:34 GMT

தோல்விகளைக் கண்டு துவளாத மீன ராசி அன்பர்களே!

நன்மைகள் அதிகம் நடந்து மகிழ்ச்சிப்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றத்துக்கான உத்தரவு வந்துசேரும். நீண்டநாள் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வும் கைக்கு கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள், தங்கள் துறையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பார்கள். பணிகளை விரைந்து முடித்து, வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் காணப்படுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முறையில் வியாபாரம் நடந்தாலும், லாபம் சற்றுக் குறைவாகவே இருக்கும். கலைஞர்கள், உற்சாகத்துடன் செயல்பட்டு பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வர். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும். சகோதர வழியில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். ஆன்மிக பயணம் அமைதி தரும்.

பரிகாரம்:- திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால், இன்னல்கள் நீங்கும்.

மேலும் செய்திகள்