வார்த்தைகளை வெளிப்படுத்தும் போது கவனமாக இருங்கள். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. எடுத்த காரியங்கள் சற்று தாமதமானாலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். பணத் தட்டுப்பாடு மன நிம்மதியை குறைக்கும். தொழில் செய்பவர்கள், பணியாளர்களால் தொல்லை உண்டாகும். பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டுங்கள்.