உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். தொழில் துறையில் இருப்பவர்கள், படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகன் அல்லது மகளால் சிறு மனவருத்தம் ஏற்பட்டு மறையும். பயணங்களின் போது கவனம் தேவை. மகான்கள் ஆசியால் மன அமைதி அடைவீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.