முயற்சியுடன் செயல்பட்டு பல காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, அலுவலகத்திலேயே செல்வாக்கான பொறுப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்கள், வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைப்பார்கள். குடும்பம் சீராக நடை பெறும். நீண்டகாலமாக வராத உறவினர் வருகை தருவர். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, சண்முகக் கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.