சிறந்த கல்வியறிவுடன் திகழும் மீன ராசி அன்பர்களே!
எதிர்பார்க்கும் பண வரவுகளில் தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் குறைகளை சரி செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகளால் சிறிது தளர்ச்சி அடையலாம். இருப்பினும் புதிய கடன்களைப் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலமாக புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்வார்கள். பங்குச் சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க பொறுமை அவசியம்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுங்கள்.