மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-04-14 00:15 IST

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

பிறருடைய பிரச்சினைக்கு வழி சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிகின்றது. இதனால் பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது. சித்திரை 9-ல் லாப ஸ்தானத்திற்கு குரு வரப்போகின்றார். அஷ்டமத்துச் சனி வாக்கிய கணித ரீதியாக தற்சமயம் விலகி உள்ளது.

எனவே, குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக இருக்கும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுக் குடும் பத்தில் இருந்த பிரச்சினை ஒவ்வொன்றாக அகன்று, உறவுகள் ஒன்றுசேரும். வாட்டி வதைத்த நோய் விலகி, உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகி விட்டது. சனி பகவான் இப்பொழுது அடியெடுத்து வைத்திருக்கும் இடம் பாக்கிய ஸ்தானமாகும். சில மாதங்கள் மட்டும் கும்பத்தில் சனி பகவான் வாசம் செய்தாலும், அதற்குள் உங்கள் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்துவிடுவார். எனவே நம்பிக்கை யோடு காரியங் களை செய்ய முற்படுங்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். முறையான பாகப்பிரிவினை நடைபெற இப்பொழுது வழிபிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிந்தவர்கள் இப்பொழுது குடும்பத்துடன் வந்திணையும் வாய்ப்பு கைகூடும். இதயம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் குரு சேமிப்பை உயர்த்தும். எதிர்பாராத நன்மைகளையும் செய்யப் போகின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, 11-ல் சஞ்சரிக்கும் பொழுது திடீர் திருப்பங்களை உருவாக்குவார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

சகோதர ஒற்றுமை பலப்படும். தடைப்பட்ட சில காரியங்கள் தன்னிச்சையாக நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 'பல காலமாக பிள்ளைகளுக்குத் திருமணம் பேசியும் முடிவாகவில்லையே' என்று ஆதங்கப் பட்டவர்களுக்கு, விரைவில் நல்ல செய்தி வரும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி அழைப்புகள் வரலாம்.

மிதுன - சுக்ரன்

உங்கள் ராசிக்கு பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், சித்திரை 20-ந் தேதி உங்கள் ராசிக்கு வரப்போகின்றார். இதன் விளைவாகத் தொழில் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் உள்ளிட்ட நன்மைக்குரிய சில மாற்றங்கள் உருவாகும். வாங்கிய இடத்தை விற்று விட்டு, புதிதாக இடம் வாங்கும் யோகமும் உண்டு. ஒரு சிலருக்கு வாகன யோகமும் வாய்க்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழி ஏற்படும். பிள்ளைகளுக்கான கல்யாண காரியங்கள் சிறப்பாக நடைபெறும். பணவரவிற்கு குறைவு ஏற்படாது. கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள்.

இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்தை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 20, 21, 28, 29, மே: 3, 4, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

மேலும் செய்திகள்