மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-01-15 00:15 IST

தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை

ஆளுமைத் திறனும், அனுசரித்துப் போகும் குணமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!

தை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் சனியோடு சூரியனும், சுக்ரனும் இணைந்திருக்கிறார்கள். எனவே உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. ஊா்மாற்றம், இடமாற்றங்கள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் 12-ல் இருப்பதால் கட்டிடப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருக்கிறார்கள். மகரத்தில் சூரியன், சனி, சுக்ரன், மீனத்தில் குருவும், ரிஷபத்தில் செவ்வாயும் சஞ்சரிக்கிறார்கள். இதன் விளைவாக பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கலாம்.

தொழிலில் கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக்கொள்வது நல்லது. பரிசீலனையில் இருந்த பதவி மாற்றம் திடீரென வரலாம். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் உறவினர்களுக்குள் திருப்தியான உறவு ஏற்படாது. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கும். சேமிப்புகள் கொஞ்சம் கரையலாம். தொழிலில் ஒருசில ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும். பூமி விற்பனையில் தடைகள் அதிகரிக்கும். குறுக்கீடு சக்திகளை மாற்ற வழிபாடுகளை முறையாகச் செய்வது நல்லது.

சூரியன் - சனி சேர்க்கை

மாதத் தொடக்கத்தில் இருந்து மாதம் முழுவதுமே சூரியன் மற்றும் சனி சேர்க்கை ஏற்படுகிறது. பகைக் கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். சகாய ஸ்தானாதிபதி சூரியன், அஷ்டமத்துச் சனியோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுவிடும். சனி விலகும் வரை பொறுமையாக இருப்பது நல்லது. வழக்கமான செயல்களில் மந்த நிலை உருவாகும்.

உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ அடிக்கடி ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் ஒரு சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். பணிபுரியும் இடத்தில் உத்தியோக உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு ஒருசிலருக்கு வாய்க்கலாம். அலுவலகத் தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

கும்ப - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் உண்டு. பால்ய நண்பர்களின் மூலம் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். பணிபுரியும் இடத்தில் சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷமடைவீர்கள்.

மகர - புதன் சஞ்சாரம்

தை 21-ந் தேதி மகர ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். சமூகத்தில் மேல்தட்டு மக்களின் நட்பால் படிப்படியாக பல காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். `புத ஆதித்ய யோகம்' இருப்பதால் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். உத்தியோகத்தில் தற்காலிகமான பணி, நிரந்தரப் பணியாக மாறும் சூழ்நிலை உண்டு.

இம்மாதம் பெருமாள் - லட்சுமி வழிபாடு பெருமை சேர்க்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 23, 24, 25, 30, பிப்ரவரி: 4, 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

மேலும் செய்திகள்