ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
எதையும் மனநிறைவோடு செய்ய வேண்டும் என்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் தாமதப்படும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு கைகொடுக்கும்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று சொல்லப்படும் குரு பகவான், உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக இருப்பவர். அவர் ராகுவோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சில நல்ல மாற்றங்களும் வரலாம். பாகப்பிரிவினைகளில் இருந்த தேக்கநிலை மாறும். தெளிந்த சிந்தனையோடு செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஒருசில நல்ல காரியம் நடைபெறும்.
குருவின் பார்வை பலத்தால் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றன. எனவே இல்லத்தில் கல்யாணம் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் படிப்படியாக விலகும். பெற்றோரின் மணிவிழாக்கள் போன்றவை நடைபெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசி மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல நேரமாகும். எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வாகனம் வாங்கி மகிழ்வதுடன் வீடு, இடம் வாங்குவதிலும் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். மாமன் - மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு விட்டுப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20, 24, 25, ஆகஸ்டு: 3, 4, 5, 8, 9, 10, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.