தமிழ் மாத ஜோதிடம்- மேஷம்

Update:1970-01-01 05:30 IST

பங்குனி மாத ராசி பலன்கள் 15.03.2022 முதல் 13.04.2022 வரை

அனுபவ அறிவின் மூலம் அகிலத்தை வசப்படுத்தும் ரிஷப ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, 9-ம் இடத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிக்கிறார். அவரோடு செவ்வாய், சனி சேர்க்கை பெற்றிருக்கின்றன. எனவே இடம், பூமியால் ஆதாயமும், எதிர்பார்த்த காரியங்களை எளிதில் நிறைவேற்றும் சூழ்நிலையும் அமையும்.

மீன - புதன் சஞ்சாரம்

பங்குனி 3-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தன -பஞ்சமாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். மனக்கசப்பு தரும் தகவல்கள் வரலாம். 'ஊர் மாற்றமோ, உத்தியோக மாற்றமோ உடனடியாகச் செய்ய வேண்டும்' என்ற எண்ணம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் மருத்துவச் செலவு அதிகரிக்கும். 'எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள்.

ராகு-கேது சஞ்சாரம்

பங்குனி 7-ந் தேதி, மேஷ ராசிக்கு ராகு செல்கிறார். இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்த அவர், இப்பொழுது விலகுவது நன்மைதான். அதே நேரம் கேது பகவான் 6-ம் இடத்திற்கு வருகிறார். இதனால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். எளிதாக முடிய வேண்டிய பிரச்சினை, கொஞ்சம் இழுபறிக்கு பிறகே முடிவுக்கு வரும். தூரதேசம் செல்லும் வாய்ப்பு கைநழுவிப் போகலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடன் சுமை குறையும். சொத்து விற்பனையால் வரவு உண்டு.

மேஷ - புதன் சஞ்சாரம்

பங்குனி 22-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், இப்பொழுது விரய ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே விரயங்கள் கூடும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் தானாக வந்துசேரும். தாமதப்பட்டு வந்த பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அதை விற்றுத் தொழிலுக்கான மூலதனத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

கும்ப - செவ்வாய் சஞ்சாரம்

பங்குனி 23-ந் தேதி, கும்ப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றிருந்த செவ்வாய், தொழில் ஸ்தானத்திற்கு செல்வது நன்மைதான். சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் தொழில் கூட்டாளிகளாக சம்மதிப்பர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 16, 17, 28, 29, ஏப்ரல்: 1, 2, 7, 8, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ராகு - கேது பெயர்ச்சி வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதன்பிறகு பொருளாதாரத்தில் உள்ள பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பிள்ளைகளால் பெருமை உண்டு. வீடு, இடம் வாங்கும் யோகம் வாய்க்கும். பணிபுரியும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும். கேட்ட சலுகைகளையும் மேலதிகாரிகள் வழங்குவர். 


Tags:    

மேலும் செய்திகள்