மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2022-11-17 00:15 IST

கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை

உதவி செய்வதால் மற்றவர் உள்ளத்தில் இடம்பிடிக்கும் மேஷ ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. மேலும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருந்து கொண்டு சனியைப் பார்க்கிறார். எனவே மாதத்தின் முற்பகுதியில் மன அமைதிக் குறைவும், அதிக விரயங்களும் ஏற்படலாம். மாதத்தின் பிற்பகுதியில் கவனத்துடன் செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

சனி மற்றும் குருவின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சனி பகவான். அவர் வக்ர நிவர்த்தியாகி இப்பொழுது பலம் பெற்று சஞ்சரிக்கிறார். இருப்பினும் கார்த்திகை 12-ந் தேதி வரை செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால், உங்களுடைய எண்ணங்களை செயலாக மாற்ற இயலாது. மனதில் ஒரு பய உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். தொழிலில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை லாபம் கிடைத்தாலும், அது மறுநிமிடமே விரயமாகும் சூழல் உண்டு.

உங்கள் ராசிக்கு விரயாதிபதியான குரு பகவான், இப்போது வக்ர நிவர்த்தியாகிவிட்டார். எனவே சேமிப்பு கரையும். உறவினர்கள் வழியிலும், நண்பர்கள் வழியிலும் செலவு வரலாம். பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். குருவின் பார்வையால், உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ள எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறும் விதம் உங்கள் பணி சிறப்பாக இருக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இந்த மாதத்தில் நடந்தேறும்.

தனுசு - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், கார்த்திகை 12-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கிறார். சகோதர, சகாய ஸ்தானம் மற்றும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கு அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உடன்பிறப்புகளின் பகை மாறும். உற்சாகத்தோடு இணைந்து பணிபுரிவீர்கள். கடன்சுமை தீரவும், கவலைகள் அகலவும் உடன்பிறந்தவர்கள் வழிகாட்டுவர். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். தொழில் துறையில் இருப்பவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்று அதில் வரும் லாபத்தை மூலதனமாக்கி தொழில் வளர்ச்சிக்கு வழி காண்பர்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

கார்த்திகை 13-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால், அவர் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்ற மனக்குழப்பம் மேலோங்கும். ஆரோக்கியத் தொல்லையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினை உருவாகும். தன ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரமாகச் சஞ்சரிப்பதால், ஒரு தொகை செலவழிந்த பிறகு அடுத்த தொகை கைக்கு கிடைக்கும்.

தனுசு - சுக்ரன் சஞ்சாரம்

கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்கள், முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கி மகிழ்வீர்கள்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் குகனை வழிபடுவதன் மூலம் குறைகள் அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-நவம்பர்: 26, 27, டிசம்பர்: 1, 2, 7, 8, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயாதிபதி வியாழன் பலம்பெற்று சஞ்சரிப்பதால், விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால் குடும்பத்தில் அமைதி காணலாம். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும். உதவி செய்வதாகச் சொன்ன உடன்பிறப்புகள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். செவ்வாய் - சனி பார்வையால் மன உளைச்சல் அதிகரிக்கும். பணிபுரியுமிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.

மேலும் செய்திகள்