ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் மேஷ ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, நீச்சம் பெற்ற உங்கள் ராசிநாதன், சனியைப் பார்க்கிறார். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு- கேதுக்களின் ஆதிக்கம் இருப்பதால் ஏற்ற- இறக்கம் கலந்த நிலையே அமையும்.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது புதனுக்கு சொந்த வீடாகும். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். அரசு வழியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால், அது கிடைக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாயின் மீது பதிகிறது. இதனால் 'குரு மங்கல யோகம்' ஏற்படுகின்றது. எனவே இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். குரு பார்வையைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, குருவோடு இணைந்திருக்கும் ராகுவையும், அதைப் பார்க்கும் கேதுவையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் தடைகள் தானாக விலகும். தக்க விதத்தில் பொருளாதார நிலை உயரும். தொழிலில் இருக்கும் குறுக்கீடுகள் அகலும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் குரு பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுவதால் வியாபாரம் வெற்றிநடை போடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெளிநாட்டில் இருக்கும் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாகப்பிரிவினை சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு செல்வது நன்மை தான். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடைவர். கலைஞர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ-மாணவிகளுக்கு தள்ளிப் போட்ட முயற்சிகள் தானாக நடைபெறும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக உழைப்பும், அதற்கேற்ற பலனும் உண்டு. பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 17, 18, 22, 23, ஜூலை: 3, 4, 7, 8, 14,15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.