மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-05-15 00:15 IST

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை

வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்திலேயே நீச்சம் பெற்று சனியைப் பார்க்கிறார். விரயாதிபதி குரு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். லாபாதிபதியான சனி, லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். ராகு -கேதுக்களின் பலம் கூடுதலாக இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும்.

ராகு-கேது சஞ்சாரம்

மாபெரும் கிரகங்களின் வரிசையில் 'சாயா கிரகம்' என்று அழைக்கப்படும் கிரகங்கள், ராகு - கேதுக்கள் ஆகும். நிழல் கிரகங்களாக இருந்து அவை பின்னோக்கிச் சென்றாலும், வாழ்க்கையில் நாம் முன்னேற்றிச் செல்ல வழிவகுத்துக் கொடுக்கும். ஜென்மத்தில் ராகு, ஏழில் கேது என்று இருப்பதால் உங்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. எனவே அதற்குரிய சர்ப்பதோஷ நிவர்த்தி பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில், அனுகூலமான தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம். காரியம் முடிவடையும் நேரத்தில் விட்டுப் போகலாம். ஏற்றமும் இறக்கமும் வந்து கொண்டேயிருக்கும். 'எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.

கடக - சுக்ரன்

வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு கைகூடும். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே நீண்ட நாட்களாக இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, திருமணம் கைகூடிவரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய திருப்பங்களை சந்திப்பீர்கள். வியாபாரம், தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு, அனைத்து சலுகைகளையும் பெறும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் உள்ளத்தை மகிழ்விக்கும்.

ரிஷப - புதன்

வைகாசி 18-ந் தேதி ரிஷப ராசிக்கு புதன் வருகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். சகாய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அளவோடு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு சலுகைகளை பெறுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 20, 21, 24, 25, 26, ஜூன்: 5, 6, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

மேலும் செய்திகள்