மேஷம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-07-17 00:15 IST

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை

நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற மேஷ ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. 'புத ஆதித்ய யோகம்', 'குரு மங்கல யோகம்', 'சுக்ர மங்கல யோகம்' போன்றவை அமையும் விதத்தில் கிரக நிலைகள் இருப்பதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் திடீர் திருப்பங்களும், திரவிய லாபமும் உண்டு.

மேஷ - குரு சஞ்சாரம்

நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று சொல்லக்கூடிய குரு பகவான், மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தெய்வ பலம் உங்களை வழிநடத்திச் செல்லும். எனவே கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு அனுகூலம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, புகழ்பெற்ற புராதனக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கல்யாணம் சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்து, பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குருவின் பார்வை பலத்தால் சப்தம ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும். ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருந்தாலும் குரு பார்வை பதிவதால் இதுவரை உங்களுக்கு எந்தெந்த செயல்பாடுகளில் எல்லாம் சிக்கல்கள் இருந்ததோ அவை அனைத்தும் விலகி நன்மைகளை வழங்கப் போகிறது.

உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் செய்தால் அது கைகூடும். 9-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். குருவை வியாழக்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் மேலும் நற்பலன்களை பெறமுடியும்.

சிம்ம - புதன்

ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நம்பிக்கைக்குரிய விதத்தில் நண்பர்கள் நடந்துகொள்வர். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பாராத விதத்தில் வந்துசேரும். வழக்குகள் சாதகமாக அமையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரும் சந்தர்ப்பங்களால் வளர்ச்சி கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். மாணவ-மாணவிகள் எதிர்பார்த்த இலக்கை அடைவர். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே மற்றொரு தொகை கரங்களில் புரளும். பொறுமை தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 19, 20 ஆகஸ்டு: 1, 2, 4, 5, 10, 15, 16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Tags:    

மேலும் செய்திகள்