மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

Update:2023-04-14 00:15 IST

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

விடா முயற்சி வெற்றி தரும் என்று கூறும் மேஷ ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கின்றார். எனவே நீங்கள் நினைத்ததெல்லாம் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கிறது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை, சொல்லியபடியே நிறைவேற்றுவீர்கள். ஆண்டின் தொடக்கமே அமோகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நவக்கிரங்களில் நான்கு கிரகங்கள் வலிமையோடு வீற்றிருந்து மாதம் தொடங்குவதால், மகிழ்ச்சி அதிகரிக்கும் மாதமாகவே இம்மாதம் அமையப் போகின்றது.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்குப் பதினோறாம் இடமான லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கின்றார். எனவே தொழில் வெற்றி நடைபோடும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கூட்டாளிகளின் ஆதரவோடு கூடுதல் லாபம் கிடைக் கும் நேரம் இது.

சனி உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர். எனவே, அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக லாபம் வர வழிவகுத்துக் கொடுப்பார். வாக்கிய கணித ரீதியான இந்தப் பெயர்ச்சி திடீர்அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கப்போகின்றது.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி உங்கள் ராசியான மேஷ ராசிக்கு, குரு பகவான் பெயர்ச்சியாகி வருகின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் அவரது பார்வைக்கு பலன் அதிகம். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப அந்த மூன்று ஸ்தானங்களும் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும்.

இதனால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சுபச்செய்திகள் வந்துசேரும். அவர்களின் கல்வி முன்னேற்றம், கல்யாண வாய்ப்பு போன்றவை கைகூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படலாம். வேலைக்கு செல்பவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளைக் கண்டு, அவர்களுக்கு மேலதிகாரிகள் உயர் பதவியை வழங்குவர்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான சுக்ரன், 3 ம் இடத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகள் வழியில் நல்ல காரியம் நடைபெறலாம். அவர்களின் கல்யாணம் மற்றும் கடல்தாண்டிச் செல்லும் வாய்ப்புகளுக்கு உறுதுணைபுரிவீர்கள். சகோதர வர்க்கத்தினரின் சுப காரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 22, 23, 24, 28, 29, மே: 9, 10, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

மேலும் செய்திகள்