உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நேரில் கண்டுகளிக்கிறார் பிரதமர் மோடி
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
அகமதாபாத்,
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி நேரில் கண்டுகளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் உடன் பிரதமர் மோடி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளிக்கிறார். மேலும், இறுதிப்போட்டியின்போது இந்திய விமானப்படை சார்பில் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.