உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்...!

இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

Update: 2023-11-10 00:57 GMT

Image Courtesy: AFP

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு முடிந்துவிடும். இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்