மகளிர் டி20 உலகக்கோப்பை; நியூசிலாந்து அணி அறிவிப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-10 03:07 GMT

Image Courtesy: @ICC

வெல்லிங்டன்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சோபி டெவைன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்;

சோபி டெவைன் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, பிரான் ஜோனாஸ், லீ காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மேர், மோலி பென்போல்ட், ஜார்ஜியா பிலிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹு.



Tags:    

மேலும் செய்திகள்