இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு..!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Update: 2023-12-05 05:53 GMT

Image Courtesy: @ICC

கேப்டவுன்,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் டெம்பா பவுமா இடம் பெறவில்லை. டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று அணிகளிலும் புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரையன்.

ஒருநாள் அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ஹென்றிச் க்ளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ராஸி வென் டர் டுசென், கைல் வெர்ரையன், லிசாட் வில்லியம்ஸ்.

டி20 அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்),ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கீ, நாண்ட்ரே பர்கர், டோனவன் பெரோரியா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், ஹென்றிச் க்ளாசென், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,லிசாட் வில்லியம்ஸ், ஜெரால்ட் கோட்ஸி, மார்கோ ஜான்சென், லுங்கி என்கிடி.

Tags:    

மேலும் செய்திகள்