நேபாளத்தில் கிரிக்கெட் போட்டியை காண கடல் அலை போல் திரண்ட ரசிகர்கள்..!

மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர் .

Update: 2023-03-16 10:21 GMT

நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் 15 ஆம் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண குவிந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரில் ரசித்தனர்..

மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் ,மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர் .

நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைராலகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்