தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்...இந்திய அணியில் இணையும் இளம் வீரர்...!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.;
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.