நன்கொடையாளர்களுக்கு இந்த நாட்களில் தங்குமிடம் கிடையாது- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்

அக்டோபர் 4-ம் தேதி அக்டோபர் 12-ம் தேதி தவிர மற்ற நாட்களில் நன்கொடையாளர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

Update: 2024-08-21 10:45 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. வழக்கமான நாட்களைவிட பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

எனவே, திருமலையில் குவியும் சாமானிய பக்தர்களுக்கு அதிக தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன், பிரம்மோற்சவ விழா நாட்களில் நன்கொடையாளர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்டோபர் 12-ம் தேதி சக்கர ஸ்நானம் தவிர மற்ற நாட்களில் நன்கொடையாளர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நன்கொடையாளர்கள் இதனை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்