சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந் தேதி திறப்பு.. 5 நாட்கள் வழிபாடு

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைப்பார்.

Update: 2024-02-09 10:20 GMT

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசன் ஜனவரி 21-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.

அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

18-ந் தேதி வரை 5 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்