தமிழகத்தில் 2,500 கோவில்களின் திருப்பணிக்கு ரூ.50 கோடி

12 திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

Update: 2024-08-14 11:15 GMT

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2023-2024-ம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோவில்கள் மற்றும் 1,250 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் என 2,500 கோவில்களுக்கான திருப்பணிகளை மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 கோடி வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக, 12 திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புற கோவில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புற கோவில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்கள் என 2,155 கோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்