திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வார விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-07-28 15:06 GMT

தூத்துக்குடி,

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

அந்த வகையில் இன்று வார விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்திருந்தனர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்