ஹேரம்ப கணபதி
விநாயகரின் திருவடிவங்களில் ‘ஹேரம்ப கணபதி’ வடிவமும் ஒன்று. நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய நிலையில் ஒரு முகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்பவர் இவர். இவரை ‘பஞ்சமுக விநாயகர்’ என்றும் அழைப்பார்கள்.;
கிழக்கு முகம் - சூரிய அம்சம்; உடல் நலனுக்கும், விவசாய வளர்ச்சிக்கும் வித்திடும்.
மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களைக் காக்கும்.
வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; வெற்றியைத் தரும்.
தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம், குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும்.
மேல் நோக்கிய திருமுகம் - சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும்.