சபரிமலையில் 4ஜி சேவை தொடக்கம்

பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.;

Update: 2025-01-04 13:25 GMT

பத்தினம் திட்டா,

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக 41நாள்கள் நடை திறக்கப்பட்டது. இதைத், தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை தருவது வழக்கம்.   

இதனையடுத்து  சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

சபரிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் தொலைத் தொடர்பு சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனால் குழுவில் தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வது, அவசர கால தொடர்புகள் போன்றவற்றில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதனால், சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் சார்பில் இலவச வைபை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது. இதன் மூலம் மகர விளக்கு பூஜைக் காலத்தில் உதவியாக இருக்கும் எனவும் இந்த இணைய சேவைகளின் நிதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்