ஆப்கானிஸ்தான் மீதான விமான தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.;

Update:2025-01-06 16:23 IST

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்

புதுடெல்லி:

ஆப்கானிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது கடந்த வாரம் பாகிஸ்தான் விமான தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அறிந்தோம். தாக்குதலில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம்" என கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்