2024-25ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் என தகவல்

2024-25ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.;

Update:2025-01-07 17:26 IST

புதுடெல்லி,

2024-25ம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிவிகிதம் 2024-25ம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2025ல் முடிவடையும் நடப்பு நிதியாண்டிற்கான சமீபத்திய ரிசர்வ் வங்கி மதிப்பீட்டின் 6.6 சதவீதத்தை விட இந்த கணிப்பு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்