சிறுமியை விரட்டி விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் அருகே உள்ள ஹெவ்லா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அங்கிருந்த தெரு நாய்கள் திடீரென சூழ்ந்து விரட்டி விரட்டி கடித்து குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தெரு நாய்களை துரத்தி அடித்து சிறுமியை மீட்டனர்.
உடல் முழுவதும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுமியை நாய்கள் கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களின் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.