எச்.எம்.பி.வி. தொற்று பரவலை கண்காணிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

தொற்று பரவல் குறித்து கண்காணிக்குமாறு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.;

Update:2025-01-08 00:55 IST

புதுடெல்லி

சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே மராட்டிய மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

இந்த தொற்று குறித்து அச்சப்படத்தேவையில்லை. அதே நேரம் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் மத்திய சுகாதார செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின்போது, இன்புளூயன்சா மற்றும் சுவாச கோளாறு நோய்களின் தாக்கம் குளிர்காலத்தில் உள்ள இயல்பு நிலையிலேயே உள்ளது. எச்.எம்.பி.வி. பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் தொற்று பரவல் குறித்து கண்காணிக்குமாறு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்