மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்தான்.;

Update:2025-01-07 19:59 IST

கர்நாடகம்,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா சொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவரது 1½ வயது மகன் மஞ்சு. நேற்று காலை வழக்கம்போல ஆஞ்சநேயாவின் மனைவி, தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரை போட்டுவிட்டு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த மஞ்சு இதை பார்த்துள்ளார். மின் மோட்டார் அருகே சென்று, அங்கிருந்த வயரை கையில் பிடித்துள்ளான். இதில் மஞ்சு மீது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட மஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சத்தம் கேட்டு தாய் வெளியே ஓடி வந்து பார்த்தபோது, மஞ்சு இறந்து கிடந்தான்.

இதுகுறித்து ஒன்னாளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மஞ்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின் மோட்டாரை சுற்றி பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வயர் தொங்கி கொண்டிருந்ததாகவும், அதை மஞ்சு பிடித்து இழுத்தபோது மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஒன்னாளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்